செயலி புக்கிங்கில் வீட்டிற்கே வந்து ஐயன் துணிகளை பெற்றுச் சென்று துணிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி ஸ்டீம் ஐயன் செய்து 48 மணி நேரத்தில் வழங்குகிறது ஐயன் பாக்ஸ். தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு எளிய ஐடியாவை உருவாக்கி வெற்றி கண்டிருக்கும் 24 வயது இளைஞரின் புத்தொழில் முயற்சி இளைஞர்களுக்கான இன்ஸ்பிரேஷன்.
யன்காரரிடம் இருந்து இன்னும் துணி வரவில்லையா? ஒரு வாரம் ஆச்சு இன்னும் ஐயனிங் துணி எடுத்துட்டு போகலை என்று வீடுகள் தோறும் அன்றாடம் இந்தப் புலம்பல்கள் இருக்கும். தானும் இதனை அனுபவித்த நிலையில், இதற்கானத் தீர்வாக ஸ்டீம் ஐயனிங் சர்வீஸ் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் 24 வயது ரூபேஷ் துங்கர்வால். தன்னுடைய புத்தொழில் பயணத்தை யுவர் ஸ்டோரி தமிழிடம் 'Iron Box' நிறுவனரும் சிஇஓவுமான ரூபேஷ் பகிர்ந்து கொண்டார். நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இளநிலை bio- informatics என்ஜினியரிங் படித்திருக்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் 40 ஆண்டுகளாக ஃபார்மா துறையில் மருந்துகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அதனாலேயே புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு தொடர்பானது என்பதால் நானும் bio informatics எடுத்து படித்தேன்.
டிப்ளமோ மற்றும் முதுநிலையில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கிறேன், இது தவிர தொழில்முனைவு சார்ந்த சில படிப்புகளையும் பயின்றிருக்கிறேன். ஃபார்மசூட்டிகல் துறையில் 7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்கிறேன், என்னுடைய விருப்பத்தினால் படிக்கும் போதே நண்பர்களுடன் சேர்ந்து இந்தியாவிலேயே முதன் முறையாக 2010ம் ஆண்டில் OMG என்ற சர்ப்ரைஸ் பிளானிங் ஸ்டார்ட் அப் தொடங்கி சில காலங்கள் நடத்தி வந்தோம். படிப்பைத் தொடர்வதற்காக அந்த ஸ்டார்ட் அப் நிறுத்தி வைத்திருந்தேன். குடும்பத் தொழிலைத் தாண்டி தொழில்நுட்பத்தை வளர்ச்சியின் உதவியுடன் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் வளர்ந்து வந்தது. 2015ம் ஆண்டில் நான் என்னுடைய தினசரி செயல்களில் துணிகளை ஐயன் செய்து வாங்கி வருவதில் இருக்கும் சிக்கலை உணர்ந்தேன். இதனையடுத்து, இதற்குத் தீர்வு காணும் தேடலில் கிடைத்ததே Iron box என்கிறார் ரூபேஷ். 2018ம் ஆண்டு முதன்முதலில் சென்னையில் ‘ஐயன் பாக்ஸ்’ தன்னுடைய சேவையைத் தொடங்கியது. இந்த ironing service நிறுவனமானது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்து துணிகளை எடுத்துச் சென்று ஐயன் செய்து மீண்டும் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பது வரை அனைத்தையும் செய்கிறது. Ironbox என்ற செயலியை உங்களது போனில் பதிவிறக்கம் செய்து எங்களின் சேவையை பெறத் தொடங்கலாம். யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் விதத்தில் எளிய முறையிலேயே செயலி வடிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Comments